தம்புள்ளை பொது கழிப்பறைக்கு அருகில் மயக்கமுற்ற நிலையில் காணப்பட்ட இராணுவ வீரர் ஒருவர், தம்புள்ளை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்துள்ளதாக தம்புள்ளை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தம்புள்ளை பிரதான பஸ் தரிப்பிடத்திலுள்ள பொது கழிப்பறைக்கு முன்னால், சாதாரண ஆடை அணிந்திருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் திடீரென மயக்கமுற்று வீழ்ந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் இருந்தவர்கள் கொரோனா அச்சம் காரணமாக, அவருக்கு உதவாத நிலையில், சுமார் 30 நிமிடங்களின் பின்னர் மூவர் இணைந்து அவரை முச்சக்கர வண்டியொன்றில் ஏற்றி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ஆயினும் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கும் முன்னரே மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இராணுவ சிப்பாயின் மரணத்திற்கான காரணம் இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பதோடு, தம்புள்ளை பொலிசார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக