Breaking

Post Top Ad

Your Ad Spot

ஞாயிறு, 3 மே, 2020

மழைக்கான சாத்தியம் - மேல், மத்திய, சப்ரகமுவ மாகாணங்களில்

மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.
அத்தோடு மேல், தென் மாகாணங்களிலும் புத்தளம், மன்னார், யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.  எனவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களை, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot