Breaking

Post Top Ad

Your Ad Spot

செவ்வாய், 5 மே, 2020

இன்று 33 பேர்; 10 பேர் குணமடைவு; ஒருவர் மரணம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 30 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்று (04) இரவு 10.30 மணியளவில் 11 பேர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 721 இலிருந்து 732 ஆக அதிகரித்த நிலையில், இரவு 11.20 மணியளவில் மேலும் 19 பேர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து அவ்வெண்ணிக்கை 732 இலிருந்து 751 ஆக அதிகரித்துள்ளது.

அதற்கமைய இன்றையதினம் (04) இதுவரை கொரோனா வைரஸ் தொற்றிய 33 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 10 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் மரணமடைந்துள்ளார்.

அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 751 பேரில் தற்போது 549 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 194 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 08 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 137 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.

அடையாளம் - 751
குணமடைவு - 194
இன்று அடையாளம் - 33
இன்று குணமடைவு - 10
சிகிச்சையில் - 549
மரணம் - 08

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot