90 வீதமான கொரோனா தொற்றாளர்கள் மிக விரைவில் குணமடைவார்கள். என்றாலும் மூச்சுத் திணறல், புகைப்பிடிப்பாளர்கள் மற்றும் முதியவர்கள் போன்றவர்கள் Covid-19 தொற்றிலிருந்து குணமடைய அதிக காலம் எடுக்கும் என்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
குறைந்தளவான தொற்றாளர்களே நோய் எதிர்ப்பு சக்தி குறைவு or நீண்டகால நுழையீரல் நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள். இவர்கள் குணமடைய தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க வேண்டியது அவசியமாகும்.
கொரோனா வைரஸ் நேர்மறையுள்ளர்கள் அல்லது கொரோனா தொற்றுக்கான அறிகுறியுள்ளவர்கள் உடனடியாக வைத்திய சாலைகளை நாடுங்கள். அத்துடன் உரிய சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்படும் வரை தங்களைத் தாங்களே தனிமைப்படுத்தி கொரோனா பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைகளை பின்பற்றும் படி கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக