Breaking

Post Top Ad

Your Ad Spot

சனி, 25 ஏப்ரல், 2020

காட்டாரில் புதிய சட்டம் | கார்களில் இரண்டு பேருக்கு மேட்பட்டவர்கள் பயணிக்க தடை

Shabab-al-Qatar: Police Cars in Qatarகத்தாரில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கார்களில் இரண்டுக்கு மேற்பட்டவர்கள் பயணிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமானது நேற்று (24.04.2020) முதல் அமலாக்கப்பட்டுள்ளது. தனியார் கார்களில் ஓட்டுநருடன் சேர்த்து இருவர் மட்டுமே பயணிக்க முடியும் என்பதாக உள்துறை அமைச்சு டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளது. என்றாலும் குடும்பங்கள் இதிலிருந்து விதிவிலக்களிக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் இந்த அறிவுறுத்தலை தவறாமல் பின்பற்றும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் COVID-19 க்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிப்பது பொதுமக்களின் "தேசிய மற்றும் தார்மீக கடமை" என்பதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot