Breaking

Post Top Ad

Your Ad Spot

செவ்வாய், 21 ஏப்ரல், 2020

நாளை (22) முதல் கத்தார் செனயா பகுதியளவில் திறக்கப்படுவதாக அரசு அறிப்பு

Qatar Highways Technical Survey Advisory Services | CAMS Asset ...கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கத்தாரில் முடக்கப்பட்ட செனயா 1- 32 வரையான வீதிகள் எதிர்வரும் புதன்கிழமை (ஏப்ரல்-22) முதல் பகுதியளவில் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி செனயா வீதி இலக்கம் ஒன்று, இரண்டு மற்றும் வகாலத் வீதி போன்றவை ஆரம்ப கட்டதாக திறக்கப்படவுள்ளதாக கத்தாரின் உதவி வெளி விவகார அமைச்சரும், அனர்த்த நிலைமை மேலான்மைக் குழுவின் பேச்சாளருமான H E Lolwah bint Rashid bin Mohammed Al Khater அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இன்று இரவு நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்தே இந்த அறிவிப்பை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செனயாவின் ஏனைய பகுதிகள் சுகாதார அதிகாரிகளின் அறிக்கைகளின் அடிப்படையில் படிப்படியாக திறக்கப்படும் என்றார். பாதைகளை திறக்கும் செயற்றிட்டத்தின் முதற்கட்டமாக திறக்கப்படவுள்ள பகுதிகளில் தங்கியிருந்த 6500 பணியாளர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா தொற்று தொடர்பான மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்  என்பதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot