Breaking

Post Top Ad

Your Ad Spot

செவ்வாய், 21 ஏப்ரல், 2020

அமெரிக்காவின் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வீழ்ச்சி - 0 டாலருக்கும் கீழே போனது

ரோனா வைரஸ் பாதிப்பால் அமெரிக்கா கச்சா எண்ணெய் விலையானது வரலாறு காணாத வீழ்ச்சியாக 0 டாலருக்கும் கீழே குறைந்துள்ளது.

கொரோனாவின் கொடூர தாக்கத்தால் உலக நாடுகள் நிலைகுலைந்துள்ளன. அமெரிக்காவிலும் பரவியுள்ள கொரோனா வைரசால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு கச்சா எண்ணெய் விலை கடும் சரிவை கண்டுள்ளது.

நேற்று அமெரிக்க பங்குச்சந்தை ( திங்கள்) தொடங்கியது முதலே கச்சா எண்ணெயின் விலை பெரும் வீழ்ச்சி அடைந்தது. அமெரிக்காவின் டபிள்யு.டி.ஐ., எனப்படும் வெஸ்ட் டெக்ஸாஸ் இண்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு (-39.14 டாலர்) என 0 டாலருக்கும் கீழே குறைந்தது. அதே போன்று (Brent) பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவை சந்தித்து வந்தன.

இதன் மூலம் அமெரிக்காவின் எண்ணெய் வர்த்தக வரலாற்றில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை ஒரு டாலருக்கும் கீழ் சென்றது இது தான் முதன்முறை என கூறப்படுகிறது. அமெரிக்க சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வீழச்சிக்கு கொரோனா பாதிப்பு தான் என கூறப்படுகின்றன.

ஆனால் ரஷ்யாவும்,சவுதியும் போட்டி போட்டுக்கொண்டு எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து எண்ணெய் வரத்தக போரை துவக்கியதே காரணம் என அமெரிக்க பாராளுமன்ற செனட் சபை உறுப்பிினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த விவகாரத்தில் அதிபர் டிரம்ப் முடிவு எடுக்க வேண்டும் எனவலியுறுத்தியுள்ளனர். (தினமலர்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot