Breaking

Post Top Ad

Your Ad Spot

வியாழன், 23 ஏப்ரல், 2020

சீனாவில் குணமாகி 70 நாட்களுக்கு பின் மீண்டும் கொரோனா உறுதி: அதிர்ச்சியில் வைத்தியர்கள் குழு

சீனாவில் மறுபடியும் உருவெடுக்கிறதா கொரோனா  என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சீனாவில் குணமாகிய பலருக்கும் மீண்டும் கொரோனா வைரஸ் உள்ளதாக சோதனையில் தெரியவந்துள்ளது.

குணமாகிய பலருக்கு 70 நாட்களுக்குப் பிறகு எந்த அறிகுறிகளும் இல்லாத நிலையில்  மீண்டும் சோதனை செய்து பார்த்த போது கொரோனா வைரஸ் தொற்று இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளதால் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும், சீன சுகாதார அதிகாரிகள் கூற்றுப்படி, இப்படி மீண்டும் கொரோனா வைரஸ் உள்ளதாக சோதனையில் தெரியவந்த எவரும் மற்றவர்களுக்கு தொற்றை பரப்பியதாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. 

இந்நிலையில், குணம் அடைந்த நோயாளிகளுக்கு 60 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது கவலைகளை அதிகரிக்கும் அதேசமயம், குணம் அடைந்த நோயாளிகளின் உடற்பாகங்களில் கொரோனா தங்கியிருக்கக் கூடும் என்பதால் அவர்கள் மீண்டும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும்  ஆனால்  அது பெரிய அளவில் ஆபத்தை ஏற்படுத்தாது என்றும் தென்கொரிய மருத்துவ ஆராய்ச்சி வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot