Breaking

Post Top Ad

Your Ad Spot

வியாழன், 3 செப்டம்பர், 2020

கத்தாரில் 212 புதிய நோயாளிகள்! ஒரு மரணம்!

 


கத்தாரில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 119,206 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் (02.09.2020) மட்டும் புதிதாக 212 கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கத்தார் பொது சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொரோனாவுக்காக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2896 வீழ்ச்சியடைந்துள்ளது. 


அடையாளம் காணப்பட்டவர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டு தற்போது சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் கொரோனா வைரஸ் சந்தேகத்தின் பெயரில் இதுவரை 639,742 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 119,206 பேரே இதுவரை கொரோனா தெற்றினால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் கொரேனா வைரஸ் காரணமாக கத்தாரில் இது வரை 199 பேர் மரணடைந்துள்ளார்கள் என்பதுடன், 116,111 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் தொடர்பான முறைப்பாடுகளை பதிவு செய்ய 16000 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கத்தார் பொது சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot