Breaking

Post Top Ad

Your Ad Spot

புதன், 13 மே, 2020

பஸ்களில் ஏற்ற வேண்டாம்

முகக்கவசமில்லாத எவரையும் பொது போககுவரத்து சேவையில் அனுமதிக்கக் கூடாதென ஹற்றன் பகுதியில் போக்குவரத்து சேவையில் ஈடுபடும்  அரச மற்றும் தனியார் பஸ் சாரதிகளுக்கும் நடத்துனர்களுக்கும் ஹற்றன் பொலிஸார் உத்தரவிட்டுள்ளார்.
“ஹட்டன் பகுதியில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பொது போக்குவரத்து சேவையில் இந்நடவடிக்கைகள் முறையாக நடைபெறாமை காரணமாக இந்த நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பஸ்ஸில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளிகள் பேணப்பட்டிருக்க வேண்டும். அளவுக்கு அதிமான பயணிகளை ஏற்றிச்செல்லக்கூடாது. ஆசனத்தில் ஒருவர் மாத்திரமே அமர்;ந்திருக்க வேண்டும். பஸ்ஸினுள் தொற்று நீக்கி உபயோகிக்கப்பட வேண்டும்” உள்ளிட்ட விடயங்களை பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு ஹற்றன் பொலிஸார் ஆலோசனை வழங்கினர்.
இதேவேளை நேற்றுமுன்தினம் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன்பின் திறக்கப்பட்டிருந்த சகல உணவகங்களும் பொலிஸாரின் அறிவுறுத்தல்களுக்கமைய நேற்று மீண்டும் மூடப்பட்டிருந்தன.
அத்தோடு நடைபாதை விற்பனையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய செயப்படுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.
பொது மக்கள் வழமை போல் தங்களுக்குத் தேவையானவற்றை வழமை போல் கொள்வனவு செய்வதனையும் ஏனையோர் தங்களுடைய கடமைகளில் வழமை போல் ஈடுபடுவதனையும் காணக்கூடியதாக இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot