இலங்கையில் கடந்த 2018ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிராக அரங்கேறிய இனக் கலவரம் தொடர்பில் பேஸ்புக் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
இலங்கையில் சமூக வலைத் தளங்களின் செயல்பாடுகள் பற்றிய விசாரணைகளின் அடிப்படையில் இலங்கையில் பாரிய வன்முறையைத் தூண்டுவதற்கு, தமது செயலியை (App) முறையற்ற வகையில் பயன்படுத்தியமையும் ஒரு காரணமாக அமைந்திருக்கலாம் என்பது தொடர்பில் அது இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளது.
இந்தோனேசியா மற்றும் கம்போடியாவில் மனித உரிமைகள் மீதான தாக்கம் குறித்த ஏனைய சுயாதீன மதிப்பீடுகளுடன், அடையாளப்படுத்தப்பட்ட சாராம்சத்தை நேற்றையதினம் (12) பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டது. அதிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக, ப்ளூம்பேர்க் இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.
"இதன் விளைவாக ஏற்பட்ட உண்மையான மனித உரிமை தாக்கங்களை நாங்கள் அங்கீகரித்து மன்னிப்பு கோருகிறோம்." என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளதோடு, உள்ளூர் மொழித் திறன்களைக் கொண்ட மதிப்பீட்டாளர்களை பணியமர்த்தல், வெறுக்கத்தக்க பேச்சுகளை தானாகவே கண்டறிந்து, தவறான உள்ளடக்கத்தை பரப்புவதைத் தடுக்கும் தொழில்நுட்பத்தை செயல்படுத்துதல் மற்றும் உள்ளூர் சிவில் சமூகக் குழுக்களுடனான உறவை மேம்படுத்த முயற்சிப்பது உள்ளிட்ட, தாங்கள் இப்பிரச்சினைகளுக்கு எடுத்துள்ள தீர்வு காண எடுத்துள்ள நடவடிக்கைகளையும் பேஸ்புக் இதில் தெரிவித்தள்ளது.
இலங்கையில் உள்ள ஒரு சில குழுக்கள் பேஸ்புக் தளத்தை தவறாகப் பயன்படுத்துவது குறித்து கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளுக்கு பதிலளிக்கத் தவறியதை, இலங்கை பற்றிய அறிக்கை விபரிப்பதாக ப்ளூம்பேர்க் இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு, சிங்கள பௌத்த ஆண்களின் உணவில் “கருத்தடை மாத்திரைகள்” கலப்பதை ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கும் முஸ்லிம் உணவகத்தை காண்பிக்கும் பொய்யான வைரல் வீடியோ ஒன்று, அமைதியின்மை மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல் ஏற்படுத்த காரணமாக இருந்தது.
சர்வதேச ரீதியில் மனித உரிமைகள் குறித்தான விடயங்களை ஆராய்வதில் பேஸ்புக் மிக மோசமான நிலைப்பாட்டையே கொண்டிருப்பது பல ஆண்டுகளாக அந்நிறுவனத்திற்கு ஒரு கறுப்பு புள்ளியாக உள்ளது. இந்நிலை மேலும் தொடர்ந்தால், தொலைதூர நாடுகளில் அதன் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மூலம் எவ்வித பயனும் இல்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக் நிறுவனம் மன்னிப்புக் கோருவது இது முதல் தடவையல்ல என்பதோடு, அண்மையில் வெளியான அறிக்கைகள், மியான்மாரில் ஏற்பட்ட கலவரத்திற்கும் அதன் செயற்பாடு தொடர்பான மதிப்பீடு காரணமாக அமைவதாக தெரிவிக்கின்றது.
குறித்த செய்தியின் முழு வடிவம் வருமாறு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக