கொரோனா தொற்றுநோய் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல், இந்தியாவின் சென்னையில் சிக்கியுள்ள இலங்கையர்கள் 305 பேரை, நாட்டிற்கு மீண்டும் அழைத்து வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான விசேட விமானமொன்று, இன்று (12) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை நோக்கி புறப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 1121 எனும் விசேட விமானமே இவ்வாறு சென்னைக்கு புறப்பட்டுள்ளது.
இவ்விமானத்தில் பயணிகள் எவரும் இன்றிய நிலையில், விமான சேவை பணியாளர்கள் மாத்திரம் சென்னைக்கு புறப்பட்டுள்ளனர்.
இவ்விமானம், பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் இன்று முற்பகல் 11.25 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக