இஸ்லாத்தில் பிரார்த்தனை என்கிற 'துஆ' ஒரு இறை வணக்கமாகும். பிரார்த்தனை என்பது மனிதன் தன் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் தம்மைப் படைத்த அல்லாஹ்விடம் கோரி அடைந்து கொள்வதற்கான முயற்சியாகும்.
மனிதன் இயல்பாகவே தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் தன்னகத்தே கொண்டவனாக இருக்கின்றான். அவற்றை அடைந்து கொள்வதற்காக அவன் தம்மைப் படைத்த அல்லாஹ்விடம் கோரும் உள்ளுணர்வையும் இயல்பாகக் கொண்டிருக்கின்றான். இந்தப்பின்புலத்தில் முஹம்மத் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை புரிவதற்கான ஒழுங்குமுறையையும் வழிகாட்டலையும் கற்றுக் கொடுத்திருக்கின்றார்கள். அத்தோடு அல்லாஹ்விடம் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படும் சந்தர்ப்பங்களையும் அன்னார் குறிப்பிட்டு வைத்திருக்கின்றார்கள். அந்த வகையில் ரமழான் மாதத்தில் நோன்பு திறக்கும் போது புரியப்படும் பிரார்த்தனையும் ஏற்றுக்கொள்ளப்படும் சந்தர்ப்பமாக உள்ளது.
இது தொடர்பில் நபி(ஸல்) அவரகள், 'இஃப்தார் - நோன்பு திறக்கும் நேரத்தில் நோன்பாளி கேட்கும் துஆ - பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும். அவை நிராகரிக்கப்படுவதில்லை' என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
(ஆதாரம் - திர்மிதி)
(ஆதாரம் - திர்மிதி)
இருந்தும் இந்த வேளையில் புரியப்படும் பிரார்த்தனையின் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் உணராது செயற்படுபவர்களும் மக்கள் மத்தியில் இருக்கவே செய்கின்றனர். இது பெரும் கவலைக்குரியதாகும்.
ஆகவே இஃப்தார் வேளை பிரார்த்தனையின் சிறப்பையும் மகத்துவத்தையும் உணர்ந்து செயற்படுவதில் ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டும். அதன் ஊடாக அல்லாஹ்வின் அருளையும் கருணையையும் பெற்றுக்கொள்ள முயற்சி செய்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக