இது முதல் முறையல்ல, ஏற்கனவே 2003 இல் அரபு நாடுகளை கதிகலங்க வைத்த வைரஸின் (SARS-Cov) இன்னுமொரு அவதாரமெ இந்த கொவிட்19 (SARS-Cov2).
ஒவ்வொரு நோய் தொற்றும் ஒரு வரஸ் துணிக்கயினால் ஏற்படுத்தவட்தோடு, மற்ற உயிரினங்களுக்கும் காற்றின் மூலம் பரவக்கூடிய ஆற்றலினை கொண்டுள்ளது.
அமெரிக்க டெக்ஸாஸ் பழ்கலைக்கழக பேராசிரியர் பெஞ்ஜமின் நியுமன் இந்த கொடிய வைரஸ் பற்றியதும் இதன் நோய்த்தாக்கத்தின் தார்ப்பரியம் பற்ற்யும் ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
கொரொனா தொற்றானது சுவாசத்தொகுதியின் நுரையீரல் அல்லது சமிபாட்த்தொகுதி உடல் அங்கங்களில் ஆரம்பிக்கலாமென முன்மொழியப்பட்டுள்ளது. பொதுவான சளி இருமலோ அல்லது வயிற்றுப்போக்கோ ஆரம்ப நோய் அறிகுறியாக இருக்கலாம்.
பொதுவாக ஆரம்பத்தில் இவ்வைரஸானது விலங்குகளில் மட்டுமெ இருந்துள்ளது, பின்னர் கூர்ப்பின் அடிப்படையில் பரிணாம மாற்றத்தினால் மனிதர்களிடையே பரவியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இன்னும் பல மர்மங்கள் இனம்காணப்படாத ந்லையில் முழு உலகமும் இதற்கான தீர்வை எதிர்பாத்துகொன்டிருக்கின்றது. மருத்துவ திறையில் இமாலய வளர்ச்சி கண்ட நாடுகள் மும்முறமாக ஆய்வில் ஈடுபடுக்கொண்டிருக்கும் வேளையில், ஏனய நாடுகள் கொரொன விமோசனத்திற்காக ஏங்கியவண்ணம் இருக்கின்றன.
நுரையீரலை அடையும் வைரஸானது, சுவாசப்பையின் கலங்களில் ஒரு வகையான திரவத்தை சுரக்கச்செய்து நியூமோனியா எனும் சுவாசக்கோளாரை உண்டாகின்றது. இது மிகவும் உயிராபத்தான விடயமாகும். இதன் காரணமாகவே இந்நோயாளிகல் செயற்கை சுவாசம் வழங்கக்கூடிய கருவிகளுடன் பொருத்தப்ட்டு சிகிச்சையளிக்கபடுகிறார்கல்.
Reference:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக