ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த வேளையில் வாகன போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைகளின் செயற்பாடுகள் குறைந்து காணப்பட்டமையால், வளி மாசடைதல் மிகவும் குறைந்து காணப்பட்டது. ஆயினும், தற்போது வளி மாசடைதல் படிப்படியாக அதிகரித்து வருவதாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்தது.
இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் வளி மாசடைதல் 50 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும், புவிச்சரிதவியலாளர் சரத் பிரேமசிறி தெரிவித்தார்.
கொரேனா வைரஸ் பரவலுடன், உலக வளி மாசடைதல் மற்றும் காபனீரொட்சைட்டின் அளவு குறைந்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் கார்களினால் வெளியேறும் கார்பன்மோனோக்சய்ட் அளவு 50 வீதத்தினால் குறைந்துள்ளதாக, நியூயோர்க்கிலுள்ள ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக