சீனா ஹுவான் மாநிலத்தில் ஆரம்பமான, உலக பெறுந்தொற்றாக உருவெடுத்த கொவிட்-19 என்ற ஆட்கொல்லி கொரேனா வைரஸ் தற்பொழுது 214 உலக நாடுகளில் மிக வேகமாக பரவி தன் ஆட்டத்தை காண்பித்து பல்லாயிரக்கணக்கான உயிர்களையும் கொன்றுதீர்த்து கொண்டிருக்கின்ற இந்த சமயத்தில், உலகம் முழுவதுமாக நோய்தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கையாக தற்பொழுது மூன்று மில்லியனைத் தாண்டியள்ளது. அதேநேரம் 2,09,000 உயிர்பலியும் இடம்பெற்றள்ளதோடு 8,84,000 மக்கள் பூரண சுகம் அடைந்துள்ளதாகவும் உலக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை உட்பட தென் ஆசியா வலயத்தில் இதுவரைக்கும் 50,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட போதும் மரண வீதம் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக குறைவாகவே பதிவாகியள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 29 ஆம் திகதி வரை ஆசியாவில் 1400 எண்ணிக்கையிலான மரணமே இடம்பெற்றுள்ளது.
ஆப்கானிஸ்தானில் 1703 தொற்றாளர்களும், பங்களாதேஸில் 5913 தொற்றாளர்களும்,மாலைதீவில் 214 நோய்தொற்றாளர்களும், நேபாளத்தில் 52 பேருக்கும் மற்றும் பாகிஸ்தானில் 13328 பேருக்கும் கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளது.
கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தாக்கத்தின் மத்தியில் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பானியா, நியுசிலாந்து, அவுஸ்ரேலியா மற்றும் ஈரான் போன்ற நாடுகள் தற்பொழுது கொரானாவை கட்டுப்படுத்தும் அதேவேளை மக்களின் அன்றாட செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதோடு இது சர்வதேச சுகாதார அமையத்தின் கட்டளைக்கு புறம்பானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த கொவிட்-19 என்ற கொரோனா வைரஸ் சீனாவில் ஹுவான் மாநிலத்தில் தோற்றம் பெற்றமையும் பரவியமையும் யாவருக்கும் தெரிந்த உண்மை. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் ஹுவான் மாநிலத்தில் கொரேனா தொற்று பரவல் வீதம் மீக சடுதியாக குறைந்துள்ளது.
அத்தோடு இறுதியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியவரும் தற்பொழுது பூரண சுகம்பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் அண்மையில் தெரிவித்திருந்தன.
மேலும் தொற்றுப்பரவலை தடுப்பதற்காக முடக்கப்பட்டிருந்த சீன தேசமும் அந்நாட்டு மக்களின் அன்றாட வாழ்கை முறைகளும் தற்பொழுது முழுமையாக இயல்புநிலைக்கு திருப்பிவிடப்பட்டிருக்கிறது. மக்கள் வழமைபோல் தங்களது செயற்பாடுகள், தொழில், வியாபாரம் மற்றும் பிள்ளைகளின் கல்வி போன்ற செயற்பாடுகள் மீளவும் வழமைபோல் இடம்பெறுகின்றன.
பல மாதங்களாக முடக்கப்பட்டிருந்த சீனாவில் முக்கிய நகரமான பீஜின் தற்பொழுது திறக்கப்பட்டிருக்கின்றது. அத்தோடு பிரதான நகர பாடசாலைகள் மீளவும் கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றது. அநேக மாணவர்கள் தங்களது கல்வியை தொடர்வதற்காக மிக ஆர்வத்தோடு செல்வதையும் செய்திகள் வாயிலாக காணக்கூடியதாய் உள்ளது.
பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட்ட போதும் குறிப்பிடப்பட்ட சில மாணவர்களையே அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.நாடுமுழுவதும் முடக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் கல்வி நடவடிக்கைள் யாவும் இணையத்தில் முலமே இடம்பெற்றள்ளது. அது மாணவர்களுக்கு புதுவித அனுபவத்தையும் கற்றல் மீதுள்ள விருப்பினையும் மேலும் தூண்டியுள்ளது என அந்நாட்டு ஆசிரியர் ஒருவர் ஊடகத்திற்கு கருத்து தெரிவித்தார்.
சீனாவில் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட போதும் அந்நாட்டு சுகாதார துறையினர் மேலும் தங்களது அவதானத்தை செலுத்திய வண்ணமே உள்ளனர். மேலும் வெளிநாட்டவர்களில் இருந்து கொரனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க மேலும் பல முன்னெச்சரிக்கை செயற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு மேலும் இம்மாதிரியான தொற்றை சீனாவில் ஏற்பட விடமாட்டோம் என அந்நாட்டு சுகாதார துறையினர் உறுதி பூண்டுள்ளனர்.
பாடசாலைக்கு மாணவர்கள் உள்வாங்கப்பட்ட போதும் அவர்களுக்கு தேவையான முழுமையான சுகாதார பாதுகாப்பு திட்டங்கள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ள அதேநேரம் தொற்று நீக்கி பாவனையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும் பொழுது விசேட சுகாதார பாதுகாப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக அந்நாட்டு கல்வித்துறை அமைச்சு தெரிவித்திருந்திருந்தது.அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது முன்னெடுத்தும் வருகின்றது.
நியுசிலாந்தில் தற்பொழுது கொரோனா தொற்று வீதம் குறைந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
அதேநேரம் இந்த தொற்றை முழுமையாக குறைத்து சுகதேகியான நாட்டை உருவாக்க மக்களின் ஒத்துழைப்பே இதற்கு காரணமாக இருந்தது என அவர் மேலும் தெரிவித்திருந்தார். ஆகவே ஒழுக்கவிழுமியம் கொண்ட நாட்டு மக்களுக்கும் பொறுப்புணர்வு கொண்ட சுகாதார துறையினருக்கும் நன்றியையும் தெரிவித்திருந்தார்.
நியுசிலாந்து பிரதமரால் விதிக்கப்பட்டிருந்த கட்டளைகள் யாவும் கடந்த 27 ஆம் திகதி தளர்த்தபட்டது. அத்தியாவசிய தேவைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டது. மக்களின் அன்றாட வாழ்கை முறைகளும் வழமைக்கு திரும்பியுள்ளது.இன்னும் சில தினங்களில் அரச மற்றும் தனியார் துறையினரின் சேவைகள் மற்றும் பாடசாலைகளின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
அவ்வாறே பொது மக்கள் வெளியில் செல்கின்ற போது கொரோனா பரவல் இல்லை என்று கவனயீனமாக செல்லாமல் பாதுகாப்புடன் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என அந்நாட்டு பொது சுகாதார துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
அவுஸ்ரேலியாவில் புதிய நோய்தொற்றாளர்களை இனங்கண்டு கொள்ள தொலைபேசி செயலி ஒன்று அந்நாட்டு நிறுவனம் ஒன்று கண்டபிடித்துள்ளது. இதனை அந்நாட்டு ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் தங்களது போன்களில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இது வெற்றியளிக்கக்கூடிய செயற்பாடு. ஆகவே இதனை ஏனைய நாடுகளுக்கும் வழங்க உள்ளதாக அதனை நிர்மாணித்த குழுமத்தினர் தெரிவித்திருந்தனர். அவ்வாறே கொவிட்-19 வைரஸில் பாதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர் சிகிச்சை பெற்று குணமடைந்து கடந்த 26 ஆம் திகதி தனது கடமைகளை மீளவும் ஆரம்பித்தார். இவர் கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என சந்தேகத்தின் பேரில் தனது மாளிகையில் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்வாங்கப்பட்டார். அடுத்தடுத்த நாட்களில் அதிக ஆபத்தை சந்தித்த இவருக்குவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த இருமாதங்களாக கொரோனா தொற்றை முழுமையாக ஒழிக்கும் முகமாக நாட்டை முற்றாக முடக்க உத்தரவிட்ட இத்தாலிய பிரதமர் கட்டம் கட்டமாக அதனை தளர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார். முதற் கட்டமாக அத்தியாவசிய தேவைகள், வர்த்தக நிலையங்கள் போன்றன திறக்கப்பட்ட போதும் பாடசாலைகள் ஆரம்பிப்பது எதிர்வரும் செப்டம்பர் மாதமே என மேலும் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு கொரோனாவில் கோரப்பிடியில் சிக்கி விழிப்பிதுங்கி தவித்த நாடுகள் தற்பொழுது அதிலிருந்து மீண்டெழ முயற்சி செய்கின்றன. இவ்வாறானா கொடிய வைரசுக்கு முகம் கொடுத்து பல உயிர்களை காவு கொடுத்த போதும் இன்று அனைத்து நாடுகளும் இவ் உயிரியல் போரில் வெற்றிப்பெற்று வரும் அதே வரிசையில் இலங்கையும் இருக்கின்றது என்பதில் ஐயமில்லை. மிக விரைவில் இலங்கையும் மீண்டு மீள எழும், வழமைபோல் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு மக்களின் அயராத ஒத்துழைப்பு, சட்டத்திற்கு மதிப்பளிக்கும் தன்மை, ஒழுக்க விழுமியம் என்பன அவசியமாகும். ஆகவே ஒன்றுபடுவோம். கொரோனாவை வென்று விடுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக