Breaking

Post Top Ad

Your Ad Spot

வெள்ளி, 24 ஏப்ரல், 2020

இனி 8 பேருடன் வீடியோ/ஆடியோ கால் – வாட்ஸ்அப் புது அப்டேட்

வாட்ஸ்அப் தன் வாடிக்கையாளர்களுக்கு புதிய அம்சத்தை உருவாக்கி கொடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் iOS (iPhone/iPad) பயனர்கள் இப்போது ஒரு குழுவில் 8 பேரை குரல் அல்லது வீடியோ அழைப்பு மூலம் இணைக்க முடியும் என்பதே அந்த அம்சம்.

4 பேருக்கு மட்டுமே ஒரே நேரத்தில் தொடர்பு கொள்ள முடியுmaana amaippai thaRபோது 8 பேராக உயர்த்தியுள்ளது வாட்ஸ்அப் நிறுவனம். குழு அழைப்புகளுக்கு அதிகமான உறுப்பினர்களைச் சேர்க்கும் அம்சத்துடன் வாட்ஸ்அப், கூகிள் மீட் மற்றும் ஜூம் (Zoom) கான்பரன்சிங் பயன்பாடுகளுக்கு கடுமையான போட்டியைக் கொடுக்க விரும்புகிறது.

இந்த அம்சத்தை Android பீட்டா பதிப்பு 2.20.132 மற்றும் iOS பீட்டா பதிப்பு 2.20.50.25 இல் அனுபவிக்க முடியும். iOS பயனர்கள் இந்த பீட்டா பதிப்பை TestFlight இல் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot